எனக்கு மொழிகள் பிடிக்கும். மொழிகளுக்குள் உள்ள வேறுபாடுகள் பற்றி அறிய பிடிக்கும். எப்படி ஒரு மொழி அந்த மொழியைப் பயன்படுத்தும் மக்களின் பழக்க வழக்கங்களை உணர்த்துகிறது என்று தெரிந்துக்கொள்ளப் பிடிக்கும்.
எனக்கு மொழிக் கற்க பள்ளி நாட்களில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஒரு சில மொழிகளை கற்க ஆரம்பித்தேன். தமிழ் தவிர மற்ற மொழிகள் எவ்வளவு தெரியும் என்பது சந்தேகம்தான்.
நான் அறிந்த மொழிகள்...
தமிழ்
என் தாய் மொழி. என் தந்தையின் இலக்கிய ஆர்வமும் திறமையும் என்னை தமிழின் மேல் ஆர்வம் உண்டாக்க வைத்தது என்றே கூறுவேன். நான் தமிழை பள்ளியில் கற்றதைவிட என் தந்தையிடம் கற்றதே அதிகம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என் தந்தை படிக்காதவர்; அவர் பள்ளிக்கு சென்றதே மொத்தம் ஆறு மாதங்கள் தான்.
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் அல்லவா.
தெலுங்கு
எங்கள் கிராமம் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ளது. மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் எங்கள் கிராமம் ஆந்திராவில் தான் இருந்தது. இரு மாநில எல்லையில் உள்ள மக்கள் இரு மொழிகளையும் பேசுவார்கள். சின்ன வயதிலிருந்தே எனக்கு தெலுங்கு புரியும். பிறகு அப்பா தெலுங்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார். விசாகபட்டினத்தில் படிக்கும்போது சுந்தர தெலுங்கை ரசித்தேன்.
ஆங்கிலம்
பள்ளியில் இரண்டாம் மொழியாக படித்தது. கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வி. ஆங்கிலம் இன்று தொழில் மொழியாகவும் எனக்கு உள்ளது. அதுவின்றி ஒரு அணுவும் அசையாது என்றும் சொல்லுமளவு ஆங்கிலம் நம்மிடம் உள்ளது.
இந்தி
என் அண்ணா ராணுவத்தில் பணி புரிந்தார். அவர் விடுமுறையில் வரும்போது இந்தி எழுத்தையும் ஒரு சில வார்த்தைகளையும் சொல்லிக்கொடுத்தார். இந்தி வார்த்தைகளைப் பார்த்தால் இது இந்திதான் என்று சொல்லுமளவுக்கு இந்தி தெரியும்.
கன்னடம்
முதன்முறை பெங்களூரு சென்றபோது அங்கு கன்னட எழுத்துக்கள் ஓரளவு தெரிந்துக்கொள்ள முடிந்தது; தெலுங்கு எழுத்துக்கள் போல உள்ளதால். பிறகு என் அண்ணா பிள்ளைகள் மீதி எழுத்துக்களை கற்றுக்கொடுத்தார்கள். எனவே கன்னட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரியும். ஆறு ஆண்டுகள் பெங்களூரில் வாழ்ந்திருந்தும் கன்னடம் பேச வராது என்பது வருத்தமே.
ஃப்ரெஞ்ச்
வேலை நிமித்தம் பாரிஸ் செல்ல வேண்டி வந்தது. அதனால், அலையன்ஸ் ஃப்ரான்ஸே-யில் ஃபரெஞ்ச் படித்தேன். இங்கு ஃப்ரெஞ்ச் மொழியை வேறுவிதமாக எளிமையாக சொல்லிக்கொடுத்தார்கள். வகுப்பின் நோக்கம் பேச்சு மொழியாகவே இருந்தது. பாரிசில் ஒரு ஆண்டு வாழ்ந்தேன். ஓரளவு பேச ஆரம்பித்தவுடன் தாய்நாடு திரும்பி செல்ல வந்தது.
ஜெர்மன்
சீமென்ஸில் வேலையில் சேர்ந்தபோது ஜெர்மனி செல்வதற்காக ஜெர்மன் படிக்கச் சொன்னார்கள். வகுப்பில் சேர்ந்து கொஞ்சம் படிக்க ஆரம்பிக்குமுன் வேலையை விட வேண்டி இருந்தது. அந்த ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விதம் பிடித்திருந்தது. வகுப்பின் நோக்கம் பேச்சு மொழியாகவே இருந்தது.
மேன்ட்ரீன்
பிம்ஸ்லர் மொழிக் கற்கும் முறைப் பற்றி படித்தேன். அதை புரிந்துக்கொள்ள மேன்ட்ரீன் என்னும் சைனீஸ் மொழி கற்க ஆரம்பித்தேன். ஆரம்பித்ததோடு சரி. மீண்டும் பயணிக்க ஆசை.
ஸ்பானிஷ்
TPRS என்னும் மொழிக் கற்பிக்கும் முறை பற்றி தெரிந்துக்கொள்ள TPRS முறையில் ஸ்பானிஷ் கற்க ஆசை. இப்போது என் மகன் விவேக் சொல்லிக்கொடுக்க Espanol கற்று வருகிறேன். duolingo.com பயனுள்ளதாக உள்ளது.
மேலும் படிக்க விரும்பியது / விரும்புவது
மலையாளம் கற்க ஆசை. ஏனோ, ஆரம்பித்திலேயே ஆர்வம் போய்விட்டது.
இப்போது மொழியியல் மற்றும் மொழி வளர்க்கும் முறைகள் பற்றி கற்க ஆர்வம். அது தொடர்பான சில புத்தகங்கள் படித்துவருகிறேன்.
நன்றி
லோகு