Saturday, April 2, 2016

அயலகத்தில் தமிழ்க் கற்பிக்க ஒரு பயனுள்ள வழி

முன்னுரை


அயலகத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நம் மொழியைக் கொண்டு செல்லவேண்டியது அவசியமும் நம் கடமையும் ஆகும். தமிழ் என்னும் விலைமதிப்பில்லாத ஒரு சொத்தை நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துள்ளார்கள். பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வந்துள்ள நாம், புலம்பெயர் சூழலில் நம் சந்ததியினர் நம் மொழியை மறந்து வருவதைப் பார்க்கிறோம்.

தமிழ்ப் பள்ளிகள் நடத்தி தமிழை அவர்களிடம் கொண்டுசெல்லும் பணி செய்து இந்த குறையை ஓரளவு தீர்த்து வருகிறோம். ஆனால், இதில் உள்ள சில சவால்கள் காரணமாக இன்னும் தமிழை முழுமுமையாகக் கொண்டு செல்லவில்லை என்றே நினைக்கிறேன். உதாரணமாக பல வருடஙகள் தமிழ்ப் பள்ளியில் படித்தும் இவர்கள் பேச்சுத்தமிழில் எழுதுவதையும், எழுத்துத்தமிழில் பேசுவதையும் பார்க்கிறோம். அதாவது தமிழ் அவர்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

நமது நோக்கம்


இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறைவான நேரம், அவர்களின் குறைந்த ஆர்வம், கற்பிக்கும் அணுகுமுறை என்று பல காரணங்களைச் சொல்லலாம். இவற்றில் முக்கிய காரணமாக நான் பார்ப்பது கற்பிக்கும் அணுகுமுறை.

இன்று ஸ்பானிஷ் போன்ற இரண்டாவது மொழிகளை கற்றுக்கொடுக்கும் பொதுப்பள்ளிகளை எடுத்துக் கொள்வோம். தினமும் ஒர் மணி நேரம், வாரம் ஐந்து நாட்கள் வீதம் நான்கு வருடங்கள் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினாலும், அவர்களால் சரியாக அந்த மொழியில் பேச முடிவதில்லை. இதே சூழ்நிலையில் தான் தமிழ் வழியில் படித்த, ஆங்கிலத்தை இரன்டாவது மொழியாக படித்த நாமும் இருந்தோம். 10 வருட படிப்புக்குப் பின் ஆங்கிலத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்குவோம். ஆனால், கொஞ்சம் கூட பேச வராது. அதே நிலையில் தான் புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கற்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் மொழிக்கல்வியின் நோக்கம் என்று தொடங்கலாம். பொதுப்பள்ளிகளின் நோக்கம் இந்த மாணவர்களை சரளமாக ஸ்பானிஷ் பேச வைக்க வேண்டும் என்பதல்ல. மதிப்பெண்களும். அந்த மொழியைப் பற்றிய அறிவும் தான்; மொழித்திறன் முதல் முக்கியம் அல்ல. ஆனால், நமது நோக்கம் மதிப்பெண்களும் மொழியறிவும் மட்டும் இல்லை. நம் பிள்ளைகள் தமிழியில் மொழித்திறனை நன்றாகப் பெற வேன்டும். தமிழ் அவர்களுக்கு அன்றாட மொழியாக இருக்க வேண்டும். தமிழை  நன்றாக அனுபவிக்க வென்டும். மேலும் அவர்கள் அடுத்த சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.

அதனால், இந்த நோக்கத்துக்கு ஏற்ற கல்வி அணுகுமுறையை நாம் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள்


எந்த பள்ளிக்கும் செல்லாமல், யாரும் கற்றுக்கொடுக்காமல், பாடத்திட்டம், தேர்வுகள் இல்லாமல், எதையும் மனப்பாடம் செய்யாமல் இரண்டு வயதில் ஒரு குழந்தையால் தாய் மொழியை சரளமாக பேச முடிகிறது. ஆனால், பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தும், வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உதவியுடனும், பத்து ஆண்டுகள் பள்ளியில் படித்தும் இரண்டாவது மொழியை பேச முடிவதில்லை. ஏன்?

குழந்தைகள் முதல் மொழியை பெறும் விதத்தைப் பாருங்கள்.
இரண்டாவது மொழியை நாம் கற்கும் விதத்தோடு ஒப்பிடுங்கள்.

இதற்கான காரணம் புரியும். அதாவது,

முதல் மொழியை ஏற்கிறோம். ஆனால்
இரண்டாவது மொழியைக் கற்கிறோம்.

பெறுவது என்பது Language Acquisition (LA). கற்பது என்பது Language Learning (LL). பெறுவதற்கும் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மேற்கண்ட பலனை பார்க்கும் போது “பெறுவது” “கற்பதை” விட பல மடங்கு பயனுள்ளது என்று தெளிவாகிறது.

“Language acquisition is about picking up a language subconsciously and naturally. It is effortless, natural, and efficient. On the other hand Language learning is about learning the language consciously. It is hard to acquire a language this way.” - Stephen Krashen.

அதாவது நாம் முதல் மொழியை Language Acquisition வழியில் பெறுகிறோம். ஆனால், இரண்டாவது மொழியைப் பள்ளிகளில் Language Learning முறையில் கற்கிறோம். அதனால் தான் இரண்டு வழிகளில் உண்டாகும் பலன்களுக்கும்  இவ்வளவு பெரிய இடைவெளி.

அணுகுமுறை


அப்படியானால், நம் பள்ளிகளிலும் தமிழை Language Acquisition வழியிலேயே நம் பிள்ளைகள் பெற வழி செய்யலாமே. ஏன் செய்வதில்லை? இதற்கு முக்கிய காரணம் மொழிக்கல்வியின் நோக்கம். பொதுப்பள்ளிகளுக்கு மதிப்பென்களும் மொழியறிவு கொடுப்பதுதான் நோக்கம் அதானால் அங்கு Language Learning முறை பரவாயில்லை.

ஆனால், நம் தமிழ்ப் பள்ளிகளின் நோக்கம் அதுவல்ல. நமக்து நோக்கம் நம் பிள்ளைகள் தமிழை தாய்மொழிப் போல பயன்படுத்த வேண்டும். தமிழின் சுவையை அனுபவிக்க வேண்டும். மேலும் அவர்கள் அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்லவேன்டும். அதனால், நம் நோக்கம் மொழித்திறன். அதனால், Language Acquisition தான் பொருத்தமானது அல்லவா.

சவால்கள்


அப்படி LA முறையில் கொண்டு செல்வது எளிதா? இல்லைதான். LA வழியில் கற்றுக் கொடுப்பதில் சில சவால்கள் உள்ளன. நேரம், மொழிச் சூழல், பிள்ளைகளின் ஆர்வம் போன்ற பல சவால்கள் உள்ளன. நம் நோக்கத்தை சரியாக அடைய வேண்டும் என்றால் இந்த சவால்களை சந்தித்துதானே ஆக வேன்டும்.

LA முறையைக் கொன்டு இரண்டாவது மொழிக்கற்பிக்கும் சவால்களை மனதில் கொண்டு அதற்கு பொருத்தமான உத்திகளை பயன்படுத்தி தமிழை தாய்மொழி போல அவர்களுக்கு கொடுக்க முடியும்.

மொழி ஏற்கும் நிலைகள்


(TBD) Picture of Language acquisition stages.

மொழி


இந்த பூமியில் தோன்றிய பல ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு இல்லாத மனிதர்களுக்கு மட்டுமே உள்ள சில விஷயங்களில் ஒன்று மொழி. இந்த மொழி மனிதர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே அந்த ஆராய்ச்சிகுப் போகவேண்டாம்.

ஆனால், ஒரு மொழியை நாம் எப்படி பெறுகிறோம், அது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

மொழிப் பெறல் (Language Acquisition)


மொழிப் போன்று ஒரு திறன் நமக்குள் வர அதற்கான தேவையான வசதிகள் நம் மூளைக்குள் இருக்க வேண்டும், அதோடு மொழியைப் பெற ஒரு பயிற்சிகளையும் நாம் செய்யவேண்டும்.

Language Acquisition Device


நாம் கருவில் உருவாகும் போதே, நம் மூளைக்குள் ஒரு மொழியைப் பெறுவதற்கான உறுப்புகள் தோன்றிவிடுகிறது. மூளையில் உள்ள இந்த உறுப்பை நவீன மொழியியல் தந்தை என்றழைக்கப்படும் நோம் சோம்ஸ்கி Language Acquisition Device (LAD) என்கிறார். இந்த உறுப்புத்தான் நாம் மொழியை நம் மூளைக்குள் ஏற்று அதை தேவையான நேரத்தில் தேவையான விதத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்று செயல்படுத்துகிறது.

முதல் மொழிக்கற்ற விதம்


நம் மூள்ளையில் மொழிக்கான உறுப்புகள் முழுதும் உருவான பின் ஒரு மொழியைக் கற்க நாம் தயார். ஒரு மொழியை நாம் பல நிலைகளிள் பெறுகிறொம் என்கிறது ஆய்வு.

நிலை 1 - First exposure to language


தாயின் வயிற்றில் இருக்கும் போதே மொழிக்கான முதல் அனுபவம் கிடைக்கிறது. தாய் பேசுவதை கேட்டு அதன் மூலம் மொழியைப் பற்றிய ஒரு புரிதல் உண்டாகிறது.

நிலை 2 - Listening


குழந்தையாக பிறந்தபின் மொழி ஏற்கும் வேலை துரிதமாக செயல்பட ஆரம்பிக்கிறது. முதலில் குழந்தைகள் அவர்களை சுற்றியுள்ள அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, போன்று அனைவரும் பேசுவதை கேட்கிறார்கள். கேட்டதை மனதின் மொழிப்பெட்டகத்தில் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

நிலை 3 - Comprehension


அவர்கள் காதில் கேட்கும் மொழியை அதோடு சம்பந்தப்பட்ட சூழலை வைத்து புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில் Listening ம் Comprehension  ம் ஒன்றாகவே நடக்கும்.

அவர்கள் புரிந்துக்கொண்டதை சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை. ஒன்று அவர்கள் உடலில் வார்த்தையை சொல்வதற்கான வசதிகள் உருவாகி இருக்காது. அதோடு தேவையான மொழி அறிவும் வார்த்தைகளும் அவர்களிடம் இருக்காது.

நிலை 4 - Silent Period


அவர்கள் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் காலத்தை Silent Period என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தேவையான அளவு மொழியை அவர்கள் மனதில் ஏற்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களால் எதையும் பேச முடியாது. ஆனால், நாம் சொன்னதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியும். புரிந்துக்கொண்டதை சரியாக நமக்கு உணர்த்தவும் வேண்டும். உதாரணம், அவர்கள் பேரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பார்கள். போய் அந்த பந்தை எடுத்து வா என்று சொன்னால் சரியாக செய்வார்கள். ஆனால், ஒரு வார்த்தை கூட அவர்களால் பேச முடியாது. “Comprehension proceeds reproduction” என்பது அனைத்து மொழியிலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். அதனால், தேவையான அளவு மொழியை அவர்களுக்கு கொடுத்தபின் தான் அவர்கள் பேசுவதை எதிர்ப்பார்க்க வேண்டும்.

நிலை 5 - Speech Emerges


அவர்கள் உடலில் ஒலியையும் வார்த்தையையும் சொல்லத் தேவையான வசதிகள் வந்தபின், மேலும் தேவையான மொழியறிவு வந்த பின் அவர்கள் தானாகவே பேச ஆரம்பிக்கிறார்கள். இந்த காலத்துக்கு முன் அவர்களை கட்டாயப் படுத்தி பேச வைக்க முடியாது. அவர்கள் பேச தயாரனவுடன் அவர்களாகவே பேச ஆரம்பிக்கிறார்கள். இதுதான் மழலை நிலை என்போம். வள்ளுவர் கூட இந்த நிலையைத்தான்

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்று பெருமையாக சொல்லி இருக்கிறார்.

இந்த காலத்தில் ஒவ்வொரு வார்த்தையாக பேசி உச்சரிப்பையும் வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும் பழகிக்கொள்கிறார்கள்.

நிலை 6 - Short sentences


பின் சிறுசிறு வாக்கியங்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். இந்த காலத்த்இல் அவர்கள் நிறைய புதிய வார்த்தைகளை வேகமாக கற்க ஆரம்பிக்கிறார்கள்.

நிலை 7 - Fluency stage


பின் பல வாக்கியங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்க்கள். இந்த லூட்டி காலத்தில் தான் “இவர்கள் ஒரு 5 நிமிடமாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தா நல்லா இருக்கும்” என்று நாமே சொல்லுமளவுக்கு அவர்களுக்கு மொழித்திறமை வளர்ந்திருக்கும். இதுவரை எந்தவொரு சிரமும் இல்லாமல் அவர்களாகவே ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு சரளமாக பயன்படுத்தும் அளவுக்கு மொழியறிவும் மொழித்திறனும் பெறுகிறார்கள்.

நிலை 8 - Literacy stage


மொழியை சரளமாக பயன்படுத்த ஆரம்பித்தப்பின் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். அதாவது படிக்க, எழுத கற்றுக்கொள்கிறார்கள். பின் இலக்கணமும் கற்க ஆரம்பிக்கிறார்கள்.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் இதை மீண்டும்  சொல்கிறேன். மொழியை சரளமாக பயன்படுத்த ஆரம்பித்தப்பின் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். அதாவது படிக்க, எழுதக் கற்றுக்கொள்கிறார்கள். பின் இலக்கணமும் கற்க ஆரம்பிக்கிறார்கள்.

உத்திகள்


இரண்டாவது மொழியை முதல் மொழியைப் போல கொடுக்க நல்ல உத்திகள் இருக்கின்றன. TPR (Total Physical response), TPRS (Teaching Proficiency through Reading and Storytelling) உத்திகளைப் பயன்படுத்தி மொழி அறிமுகம் செய்யலாம். பின்பு TBLT (Task Based Language Teaching) உத்தியைப் பயன்படுத்தி மொழிவளம் கொடுக்கலாம். பின் FVR (Free Voluntary Reading) உத்தியை பயன்படுத்தி படிக்கும் திறனை வளர்க்கலாம். மேலும் மொழியை மொழியாக சொல்லிக்கொடுக்காமல் வேறு ஒரு பாடத்தை தமிழ் வழியாக சொல்லிக்கொடுக்கலாம். இந்த உத்திக்கு CBI (Content Based Instruction) என்று பொருள். நம் ஊரில் ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் கற்றதால் ஆங்கிலத்தை வெறும் மொழியாக மட்டும் அல்லாமல் CBI உத்தி பயன்படுத்தி கற்றதால் அவர்களால் சில ஆண்டுகளிலேயே ஆங்கிலத்தில் பேச முடிகிறது.

அதாவது, LA அணுகுமுறை கொண்டு இந்த உத்திகளை பயன்படுத்தி தமிழை இவர்களுக்கு தாய்மொழி போல கொடுக்கலாம்.

மாற்றங்கள்


LL முறைக்குப் பதில் LA வழியை பயன்படுத்தி தமிழை வளமாக கொண்டுச்ல்வோம்.


மொழியை ஏற்பதற்கும் மொழியைக் கற்பதற்குமான ஒரு அடிப்படை வித்தியாசம்.



மேலுள்ள படத்தில் கொடுத்துள்ளது போல LL முறையில் மொழியறிவு அதிகமாகவும் மொழித்திறன் குறைவாகவும் பெறுகிறார்கள். ஆனால், LA முறையில் மொழித்திறன் அதிகமாகப் பெறுகிறார்கள். நம் நோக்கத்தை அடைய நாம் அவர்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டியது மொழித்திறனே.

இந்த மாற்றங்களை செய்து LA முறையில் சிங்கப்பூர் பள்ளிகள் நல்ல பலனை அடைந்து வருவதைப் பார்க்கிறோம்.

பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்


மேலே குறிப்பிட்டது போல நம் பிள்ளைகள் எழுத்துத்தமிழில் பேசுவதையும் பேச்சுத்தமிழில் எழுதுவதையும் பார்க்கிறோம். ஏன் இந்த குழப்பம்? நாம் தமிழ் படிக்கும் போது இந்த குழப்பம் வரவில்லையே. காரணம், நாம் முதலில் பேச்சுத்தமிழில் சரளமாக பேசி பின்புதான் எழுத்துத்தமிழ் கற்க ஆரம்பித்தொம். அப்படி எழுத்துத்தமிழ் கற்கும் போது அது நமக்கு வேறு மாதிரியாக தெரியவில்லையே.

அப்படியென்றால், நாம் முதலில் LA- முறையைப் பயன்படுத்தி இவர்களுக்கு நன்றாக பேச்சுத்தமிழில் பேச பயிற்சி கொடுத்த பின்தான் எழுத்துத்தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டுமல்லவா? இப்படி இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம் அல்லவா?

முடிவுரை


தமிழை LA முறையில் கொண்டுசெல்வோம். வளமாக அவர்கள் தமிழை இயற்கையாக எளிமையாக பெற வழி வகுப்போம். நம் நோக்கத்தை எளிதில் அடைவோம்.

Some useful quotes


We acquire a language when we understand the message. - Stephen Krashen

Most kids acquire the language in a context naturally and effortlessly. - Dr. Blaine Ray.

We cannot really teach a language, but can only create conditions in which it develops in the mind in it’s own way. From the book Beyond Methods by Dr. B. Kumaravadivelu

நன்றி!

1 comment:

  1. This was published in ITA's DTEC 2016 Vizhaa malar in May 2016. Also published in TamilEdu.org.

    ReplyDelete