Motivation is the difference between success and failure. அதாவது எந்த ஒரு காரியத்திலும் ஊக்கமும் ஆர்வமும்தான் அந்த வேலையின் வெற்றித்தன்மையை நிர்னயிக்கிறது. அதனால், நம் மாணவர்கள் தமிழை நன்கு கற்க அவர்களுக்கு ஊக்கம் மிக முக்கியம்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை (குறள் 594)
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். ஊக்கமும் ஆர்வமும் இல்லாத மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருந்தாலும் மூளையின் கற்கும் கதவை மூடிவிட்டு தான் உட்கார்ந்திருப்பார்கள். எனவே தமிழை ஆர்வமுடன் கற்க அவர்களை நாம் எப்படி ஊக்கப்படுத்தலாம்?
இரு வகை ஊக்கங்கள்
ஊக்கம் என்பது புற ஊக்கம் என்றும் அக ஊக்கம் என்றும் இரண்டு வகைப்படும். புற ஊக்கம் என்பது வெளியிலிருந்து, அதாவது மற்றவர்களிடமிருந்து, வருவது. அதாவது ஒரு செயலை நன்றாக செய்ததற்காக மற்றவர்கள் தரும் பொருட்கள், பாராட்டுகள் போன்றவை. உதாரணம்: ஒரு மாணவர் வீட்டுப்பாடம் நன்றாக செய்தால் அதற்கு ஆசிரியர்கள் தரும் மதிப்பெண், ஸ்டிக்கர், பாராட்டு போன்றவை. அக ஊக்கம் என்பது உள்ளிருந்து வருவது. அதாவது தனக்குத்தானே ஆர்வம் கொள்வது. உதாரணம்: நம் தொண்டூழியர்கள் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் ஆண்டு கணக்கில் ஆண்டு முழுதும் பள்ளியில் வந்து சேவை செய்வது. இவர்களுக்கு அவர்கள் செய்யும் சேவைதான் சிறந்த வெகுமதி, வேறு பொருட்கள் அல்ல.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்று பழமொழி உள்ளது. அந்த தூண்டுகோல் சுய தூண்டுகோலாக இருந்தால் அதன் பயன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
புற ஊக்கம்
நாம் மாணவர்களை ஊக்குவிக்க அவர்களது நல்ல செயலை பாராட்டுவது, பரிசுப் பொருள்கள் தருவது, அதிக மதிப்பெண்கள் தருவது போன்ற உத்திகளைப் பயன்படுத்துகிறோம். இவையாவும் பயனுள்ள உத்திகள் தான். இவை மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. மாணவர்கள் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதியை நினைத்து நல்ல செயல்களில் ஈடுபடுவார்கள் அல்லது தண்டனையிலிருந்து தப்பிக்க ஆசிரியர் எதிர்பார்ப்பதுபோல் நடந்துக்கொள்வார்கள்.
அக ஊக்கம்
அக ஊக்கம் என்பது சுய ஊக்கம். உள்ளிருந்து வருவது. எனக்கு இன்னின்ன தேவைகள் இருக்கின்றன. இன்னின்ன செயல்கள் பிடிக்கும். அதனால், நான் இதைச் செய்ய விரும்புகிறேன். உடற்பயிற்சி, விளையாட்டு, தொண்டூழியம் போன்றவை சில உதாரணங்கள். அக ஊக்கம் உள்ளவர்கள் அந்த காரியத்தை செய்ய வேறு எந்த வெகுமதியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஏன் தடையே வந்தாலும் கூட அந்த காரியத்தை சிறப்புடன் செய்வார்கள்.
அக ஊக்கம் வளர்க்க என்ன செய்யலாம்
இரண்டாவது மொழி கற்றலில், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகள், தமிழ் கற்க சுய ஊக்கம் உடையவர்கள் குறைவானவர்களே. அப்படி சுய ஊக்கம் இருந்தால் நாம் ஒன்றும் செய்ய வேண்டாமே. அவர்களிடம் சுய ஊக்கமும் தன் ஆர்வமும் வளர்க்க பின் கண்ட சில வழிகளை நடைமுறைபடுத்தலாம்.
ஒரு மொழியை நன்றாக கற்க அந்த மொழியை உள்மூளைக்குள் உள்வாங்க வேண்டியது மிக அவசியம். அப்படி நிரந்தரமாக உள்மனதுக்குள் பெறவில்லையென்றால், அவர்கள் கற்பது தற்காலிகமாக மனதில் இருந்து விரைவில் மறைந்து போக நேர்கிறது. அப்படி தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக சேர்க்க என்ன செய்யலாம்? மொழியிலாளர் முனைவர் க்ரேஷன் அவர்கள் சொல்லும் ஒரு சில கருத்துக்களைப் பார்ப்போம்.
A language is acquired when the message is understood in a low anxiety environment.
Give them Comprehensive, Interesting, and Compelling input.
We need to make sure the affective filter is lowered as much as possible.
Involve them in language acquisition activity instead of the language learning activity.
இதன் பொருள் என்ன?
ஒரு மொழியை நாம் கற்க எந்தவொரு அழுத்தமோ கவலையோ இல்லாத சூழலில் கற்கவேண்டும். கற்கும் போது நாம் கேட்பது நமக்கு எளிதில் புரிவதாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.
சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்? TPRS என்னும் மொழிக்கற்பிக்கும் உத்தியை உருவாக்கிய முனைவர் ரே என்பவர் சில உத்திகளைக் கூறுகிறார். அவற்றில் ஒன்று
Teach the language through stories, especially personalized mini situations. Ask them to create or tell their own story in the target language. If they are not ready, the teacher will tell a story that involves the students as characters. This is personalized mini situation. How do we make this interesting? He gives a tool for that; it is called BEP (Bizarre, Exaggerated, and Personalized). Make the story bizarre. Example: I wanted to go to electronic store and purchase 3.5 (three and half) bananas. Buying banana from an electronic and that too 3.5 bananas is bizarre enough. Exaggerate: the store owner said the banana costs 3 million dollars. I asked for 25 cents and he gave it for 3732 cents. Personalized: this story though imaginary is theirs and hence it is personalized. He says this make the story developing and telling session interesting and helps them to acquire more language.
ஆசிரியர்கள் பாடங்களை வகுப்பில் கொடுப்பவர்களாக மட்டும் இல்லாமல், ஒரு facilitator ஆகவும் enabler ஆகவும் செயல்படலாம்.
மாணவர்கள் கற்றலில் அவர்களே முடிவு செய்வதாகவும், பொறுப்பு ஏற்கும் வகையிலும் அமைக்கலாம். மாணவர்களை
கற்றலில் ஈடுபடுத்தலாம். அதாவது, என்ன பாடங்கள் அன்று படிக்கலாம் என்ன
செயல்பாடுகள் செய்யலாம் போன்றவற்றில் அவர்களை பங்காற்ற வைக்கலாம்.
பாடத்திட்டங்கள் மொழி சார்ந்ததாக (Language centered) இல்லாமல், கற்கும் சூழலை (Learning centered) உருவாக்குவதாக அமைக்கலாம். மொழி பாடத்திட்டங்கள் மொழியறிவு கொடுப்பவையாக மட்டும் இல்லாமால் மொழித்திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொழியறிவைவிட மொழித்திறன் அதிக அளவில் இருக்குமாறு வகுப்பு செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
பாடங்களும் வகுப்பு செயல்களும் பொருத்தமான அளவு சவால்கள் உடையதாக வைக்கவும். முனைவர் க்ரேஷன் அவர்களின் (i+1) என்னும் அணுகுமுறையைப் பார்க்கவும்.
பாடங்களையும் வகுப்பு செயல்களையும் interesting ஆகவும், relevant ஆகவும், personalized ஆகவும் நடத்தலாம்.
தேர்வுகளை அவர்களே மதிப்பீடு செய்யவைக்கலாம் (peer evaluation, self correction). தேர்வுகளை அவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லும் கருவியாக பயன்படுத்தலாம்.
மதிப்பெண்களைவிட தமிழ் கற்றலுக்கு முக்கியத்துவம் தரவும்.
ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கவும். மொழியைப் பயன்படுத்தும் போது தவறு இருப்பது வழக்கமே. அதனால் தப்பு செய்வது பிரச்சனையே இல்லை என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும். ஓரூ இரண்டு வயது குழந்தை மழலை பேசும்போது தப்பாக பேசுகிறோம் என்று பயந்திருந்தால் மொழி வந்தே இருக்காது. ஆரம்ப வகுப்பில் மாணவர்கள் செய்யும் தவறுகளை அதிகமாக திருத்த வேண்டாம்.
முடிவுரை
புற ஊக்கமும் பயனுள்ளதுதான். ஆனால், அக ஊக்கம் (சுய ஊக்கம்) தான் நீண்ட, அதிக பலனைத் தரும். எனவே மேலே கொடுத்துள்ள சில ஆலோசனைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சுய ஊக்கம் உண்டாகுமாறு செய்து தமிழ் கற்றலை அவர்களுக்கு சிறப்பானதாக மாற்றி அமைத்து அவர்கள் தமிழை நன்றாகவும் ஆர்வத்துடனும் நீண்ட காலங்கள் பயன்படுத்தும் வகையிலும் செய்யலாம்.
Summary
Two types of motivation:
நன்றி
லோகு