Tuesday, September 20, 2016

Ice Breaker in Acquiring a new language

நாம் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும் போது நமக்கு நிறைய சவால்கள் இருக்கும். மொழி எப்படி இருக்கும்? அதன் வாக்கிய அமைப்பு எப்படி இருக்கும்? எவ்வளவு வார்த்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும்? போன்ற நிறைய கேள்விகள் நம் மனதில் தோன்றும். இந்த கேள்விகளையெல்லாம் தாண்டி சென்றபின் தான் நாம் மொழியை பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். மொழியை பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சரியாக சொன்னோமா? தவறு செய்துவிட்டால் எப்படி போன்ற தயக்கங்க்களும் வரும்.
சரி இதை எப்படி செய்யலாம்? இலக்கண விதிகள், தேவையான வார்த்தைகள் வேண்டிய அளவுக்கு கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கலாமா? அல்லது சிறிய அளவுக்கு வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தெரிந்துக்கொண்டு அதை நன்கு பயன்படுத்த ஆரம்பித்த பின் அடுத்த நிலைக்கு செல்லலாமா?

The Pimsleur’s 3rd Principle states:

Core Vocabulary

Effective communication in any language depends on mastery of a relatively limited number of words and structures. Trying to learn too much at once substantially slows the process, and many people quickly become discouraged. Limit the amount you learn at any one time, giving your brain a chance to internalize each new item before moving on. Once this foundation is built, adding new words and phrases becomes easy and natural because there’s a clear framework to attach them to.

அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கசடற கற்று, அதற்குத்தக நின்றால் அதற்குப்பிறகு மேலும் அதிகப்படியான வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சேர்ப்பது எளிது.

ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரு பாடம் படித்துவிட்டு, அடுத்த பாடத்தை வேறு ஒரு தலைப்பில் படிப்பது சரியான பயனைத் தராது. முதல் பாடத்தையே நன்கு கற்று பலமுறை பயிற்சி செய்து, அதை நம் மனதில் சரியாக நின்று மற்றவர்கள் அதில் சொல்வது நமக்கு புரியவும், நம்மால் அதில் சில விஷயங்க்களை சொல்லவும் செய்தால், மொழி நன்றாக ஆழ்மனதைச் சென்றடையும்.

அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது -- பழமொழி

“We practice this story in French class until they get bored” - Ms. Vyjayanthi Raman.

நன்றி
லோகு