தமிழ் வகுப்பில் இலக்கணம் சொல்லிக்கொடுப்பது எப்படி? எந்த அளவுக்கு சொல்லிக்கொடுக்கலாம். புலம்பெயர் சூழலில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு எளிமையாக போய்ச் சேரும்?
போன்ற கேள்விகள் நம்மிடம் உள்ளன. இவை அவசியமான கேள்விகளும் கூட.
எந்தவொரு மொழிக்கும் இலக்கணம் தான் அடிப்படை விதிகளை வகுத்துக் கொடுக்கிறது. இலக்கணம் இல்லாமல் எந்தவொரு மொழியும் இருக்க முடியாது, இலக்கண விதிகள் இல்லாமல் ஒரு மொழியை சரிவர பயன்படுத்தவும் முடியாது.
இதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
ஆனால், அதை எப்படி சொல்லிக்கொடுப்பது, புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்படி கொண்டுசெல்வது என்கிற விஷயத்தில் நிறையவே மாற்றுக்கருத்துக்கள் உள்ளதை மறுக்கவும் முடியாது.
மொழிக்கல்வி பற்றி எந்தவொரு கேள்வியும் விவாதமும் வந்தாலும் எனக்கு முதலில் தோன்றுவது நாம் நம் தாய் மொழியை எப்படி கற்றுக்கொண்டோம். நமக்கு எந்த அளவு இலக்கணம் சொல்லிக்கொடுக்கப்பட்டது 3 வயதில் இலக்கணப் பிழையில்லாமல் நம்மால் பேச முடிந்ததற்கு எந்தவிதமான, எப்படிப்பட்ட இலக்கணப் பயிற்சி தேவைப்பட்டது? .அதுபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பிள்ளைகள், நாம் பள்ளிக்கு போகும் முன் நமக்கிருந்த மொழித்திறன் பெற எந்த அளவு இலக்கண பாடங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் பதிலாக வருகிறது.
அதற்காக இலக்கணம் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை என்று சொல்லவில்லை. மொழியை அவர்கள் பயன்படுத்தும் போது இலக்கண விதிகளின் பயன்பாடு தானாக அவர்களுக்கு புரிய வேண்டும்படி பயிற்சியளிக்க வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்டது.
இலக்கண விதிகளை மட்டும் தேவைக்கு மீறி சொல்லிக்கொடுத்து அவர்களை கஷ்டப்படுத்தவும் கூடாது. அதே சமயத்தில் அவர்களுக்கு வாக்கிய அமைப்பை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்கிற தயக்கமும் வரக்கூடாது.
இலக்கண விதிகளை சொல்லிக்கொடுத்து மொழியை கற்றுக்கொடுப்பது ஒரு வகை. மொழியை அறிமுகப் படுத்தி, மொழியைப் பயன்படுத்த வைத்து அதன் மூலம் மொழி விதிகளை அவர்கள் உணரவைப்பதன் மூலம் இலக்கணம் சொல்லிக்கொடுப்பது இன்னொரு வழி. இரண்டாவது வழியே பயனுள்ள வழி என்கிறார் மொழியிலாளர் ஸ்டீபன் க்ரேஷன் அவர்கள்.
இலக்கண வழி மொழிக்கல்வி பற்றி க்ரேஷன் அவர்கள் சொல்வதைப் பார்ப்போம்.
"I have a Ph,D in Grammar. Grammar was my life. I taught ESL classes for decades using Grammar based approach. I strongly believed grammar approach is the best way to teach a language. After several years of experience in teaching ESL and several studies, I learned that the grammar based language teaching does not work. We need a better way to teach a language. After studying how we acquire languages and we acquire our first language, I conclude that the better way to teach a language is to follow the Natural Approach. Help the students with enough comprehensible input. After enough comprehensible input and after enough language concepts are built in the subconscious mind, the speech will emerge. After the emergence of the speech, the grammar (language) rules will be deduced. We all learn the language the same way. The language is learned one way and only way. That is, the language is acquired when the message is understood in a low anxiety environment."
What do the experts in the field recommend about teaching grammar.
Dr. Kumar:
Deductive Vs Inductive grammar teaching. Expose the learners to contextual language environment. They will discover the grammar rules. This is Inductive approach.
Dr. Krashen
Comprehension Theory Vs Skill Building.
Give them comprehensible input that has good amount of grammar concepts. From this they learner will understand and master grammar.
Dr. Ray
We do not teach grammar explicitly. Give them comprehensible input that has good amount of grammar concepts. From this they learner will understand and master grammar. We delay teaching explicit grammar as late as possible. We teach them in Advance classes since the standardized tests require them. Same as above.
ஒரு மூன்று வயது குழந்தை பேசுவதை கவனிப்போம். நான் 10 வருடம் ஆங்கிலம் படித்தும் ஆங்கிலம் பேச முடியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு ஆங்கில இலக்கணம் நன்றாகவே தெரிந்திருந்தது. நிறைய வார்த்தைகளும் கற்றிருந்தேன். இருந்தாலும் அந்த மூன்று வயது குழந்தை அளவுக்கு என்னால் பேச முடியாதது ஏன்? இலக்கணம் கற்காமல் சரியான இலக்கணத்தோடு அந்த குழந்தைக்கு எப்படி பேச முடிகிறது? இலக்கணம் நன்கு கற்றும் என்னால் பேச முடியாததற்கு என்ன காரணம்?
இலக்கணம் கற்க இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறை நாம் ஆங்கில வகுப்பில் கற்றது போல இலக்கண விதிகளை விளக்கி அதைக் கொண்டு தேர்வு எழுத வைத்து புரியவைப்பது. இரண்டாவது முறை மொழியை கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி, சரளமாக பேசியபின் அதன் மூலம் இலக்கண வழிகளை புரிந்துக்கொள்வது.
இதில் எந்த வழி நல்ல பலனைக் கொடுக்கிறது? மூன்று வயதுக் குழந்தை சரியான இலக்கணத்தோடு பேச அதிகம் உதவியது எது என்று பார்க்கும் போது இரண்டாவது முறையே என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எனவே நம் வகுப்புகளில் மொழித்திறன் வளர்க்க முக்கியத்துவம் தருவோம். பின் மாணவர்கள் நன்றாக பேசியபின் இலக்கண விதிகளை சொல்லிக் கொடுப்போம்.
மேலும் விரிவாக எழுதுகிறேன்.
நன்றி
லோகு

No comments:
Post a Comment