Monday, January 19, 2015

Teaching Proficiency thru Reading and Storytelling - TPRS

இங்கு இரண்டு கட்டுரைகளில் TPRS பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். TPRS முறையின் மூலம் தமிழை முழுவதும் வகுப்பில் பயன்படுத்தி தமிழ் கற்றுக்கொடுக்க முடியும் என்றும், Krashen's Natural Approach -க்கு TPRS நன்கு பயன்படும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

TPRS என்றால் என்ன? அதை எப்படி வகுப்பில் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

கதக-வின் நான் கலந்துக்கொண்ட ஒரு ஆசிரியர் பயிற்சியில் திருமதி வைஜெயந்தி இராமன் அவர்கள் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சியின் போது முதலில் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையை ஃப்ரெஞ்ச் மொழியிலேயே சொன்னார். அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியாதிருந்தும் அவர் சொன்ன விதத்தில் அனைவரும் அவர் சொன்ன கதையை புரிந்துக்கொண்டோம். புரிந்துக்கொண்டது மட்டுமல்ல அவர் ஃப்ரெஞ்சில் கேட்ட ஒரு சில கேள்விகளுக்கு பதிலும் சொன்னோம்.

எப்படி நாம் ஃப்ரெஞ்ச் தெரியாமல் அவர் சொன்ன கதையை தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்காமல் புரிந்துக்கொண்டோமோ அதுபோலவே தமிழ் தெரியாமல் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு தமிழிலேயே பேசி தமிழ் கற்றுக்கொடுக்க முடியும் என்பதுதான் அந்த பயிற்சியின் முதல் பாடம்.

திருமதி வைஜெய்ந்தி அவர்கள் பயன்படுத்திய முறைக்கு TPRS என்று பெயர். TPRS என்பதற்கு TPR Storytelling என்றும் பின்பு Teaching Proficiency through Reading and Storytelling என்றும் சொல்லப்பட்டு வருகிறது. Dr. Asher உருவாக்கிய TPR (Total Physical Response) என்னும் முறையை பயன்படுத்தி கதைசொல்வதன் மூலம் மொழியை எப்படி கொண்டுசெல்லலாம் என்பதுதான் TPRS. இதை உருவாக்கியவர் Dr. Blaine Ray என்பவர்.  அதாவது செயல்கள் மூலமாகவும், தெரிந்த விஷயத்தைக் கொண்டு தெரியாத ஒரு விஷயத்தை சொல்வதற்கும், முக்கியமாக கதை சொல்வதன் மூலம் மொழியை கொண்டுசெல்வதற்கும்  TPRS என்று பெயர்.

TPRS பற்றி கூகுள், யூட்யூப், மற்றும் விக்கிபீடியாக்களில் நிறைய விவரங்கள் உள்ளன. புத்தகங்களும் கிடைக்கிறது. அவற்றைப் படித்து அறிந்து அந்த முறையை வகுப்பில் பயன்படுத்தி நம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் தமிழ் கற்றுக்கொடுக்கலாம் என்பது என் நம்பிக்கை.

Resource: Fluency Through TPR Storytelling by Blaine Ray & Contee Seely.

இந்த முறையை பயன்படுத்தி தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பநிலையில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் மகிழ்ச்சியுடனும் எளிமையாகவும் தமிழ் கற்க உதவ பரிந்துரைக்கிறேன்.

இது பற்றி மேலும் எழுதவுள்ளேன்.

நன்றி
லோகு

1 comment:

  1. James J Asher எழுதிய Learning another language through actions புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன். இப்புத்தகம் TPRS பற்றியது. படித்து முடித்ததும் TPRS பற்றி மேலும் எழுதுகிறேன்.

    ReplyDelete