Tuesday, June 23, 2015

கேள்வி கேட்கலாம் வாருங்கள்



கேள்வி கேட்கும் உத்திகள்
Use right questioning technique to improve language acquisition

கேள்வி வகைகள்

மாணவர்களின் மொழித்திறன்

உத்திகள்

Display questions:
  • Choice questions
  • Product questions
Referential questions:
  • process questions
  • metaprocess questions

ஆரம்பநிலை:
  • listening and speaking skill
இடைநிலை:
  • can read and write sentences
உயர்நிலை:
  • can read and understand stories
  • Can write reasonably well.

ஆரம்பநிலை:
  • choice questions
  • product questions
இடைநிலை:
  • Product questions
  • process questions
உயர்நிலை:
  • process questions
  • metaprocess questions
முடிவு:

மாணவர்களின் மொழித்திறனுக்கேற்ப சரியான வகை கேள்விகள் கேட்பதன் மூலம் மொழிக்கற்கும் ஆர்வத்தையும் மொழிவளத்தையும் வளர்க்க உதவலாம்.

கேள்வி என்றாலே நம் பெரும்பாலோர்க்கு மனதில் முதலில் தோன்றுவது தேர்வுகளும் அதனால் உண்டாகும் விளைவுகளும் தான்.

இந்த கட்டுரை தேர்வுகள் பற்றியது அல்ல. அப்பாடா! இந்த கட்டுரை வகுப்பில் கேள்வி கேட்கும் உத்தியை பயன்படுத்தி எப்படி மாணவர்களுக்கு நல்ல முறையில் மொழியை சொல்லிக் கொடுக்கலாம் என்பதை பற்றியதே.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...

பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே!

என்ற பாடல் வரிகள் நம் பெரும்பாலோர்க்கு ஞாபகம் இருக்கும். கேள்வி என்பது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமானது. வாழ்க்கையில் மட்டுமில்லை, வகுப்பறையிலும் கேள்வி கேட்கும் உத்தி மிகப் பயனுள்ளது.

கேள்வி கேட்கும் உத்தியை எப்படி வகுப்பறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு நம் மொழியை எளிமையாக கொண்டு செல்லலாம்? இங்கு கொடுக்கப்பட்டுள்ள உத்திகள் வகுப்பறையில் கேள்விகள் கேட்க மட்டுமே. தேர்வுக்கானது அல்ல.

கேள்விகேட்பது ஒரு அருமையான பயனுள்ள உத்தி. சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவர்களுக்கு பாடத்திலும் வகுப்பு செயல்பாடுகளிலும் ஆர்வத்தை உண்டாக்கலாம். நாம் கேட்கும் கேள்விகள் மாணவர்களின் வயதுக்கும் அவர்களது மொழித்திறனுக்கும் ஏற்ப இருக்க வேண்டும். கேள்விக்கான பதில் எளிமையாகவும் இருக்கக் கூடாது, மிகக் கடினமாகவும் இருக்கக் கூடாது. மொழியிலாளர் முனைவர் க்ரேஷன் சொல்வது போல் (i + 1) என்ற உத்தியை கவனமாக கையாள வேண்டும். (i + 1) உத்தி என்பது தற்போது மொழித்திறனில் i நிலையில் உள்ளவர்களை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வதே (i+1) உத்தி. அதாவது, ஒரு மொழித்திறனை கொடுக்கும்போது ஒரு படி மட்டும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்கிறார்.

சரி, எந்த மாதிரியான கேள்விகள் கேட்கலாம்?

கேள்விகள் பலவகைப்படும். எந்த மாதிரியான கேள்விகள் பயனுள்ளதாக இருக்கும்? அது மாணவர்களின் மொழித்திறனைப் பொருத்தது.

5W1H (What, Who, Where, When, Why, and How) என்னும் முறைப்பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். நாம் சொல்லிக் கொடுத்தது மாணவர்களுக்கு சரியாக போய் சேர்ந்ததா என்று அறிய இந்த உத்தி பயன்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நிலைக்கு செல்ல என்ன செய்யலாம்.

மொழித்திறன்களாக புரிதல், பேசுதல், படித்தல், எழுதுதல் என நான்கு திறன்களாக பிரிக்கலாம். இவற்றை ஆரம்பநிலை, இடை நிலை, மற்றும் உயர்நிலை அளவாக மீண்டும் பிரிக்கலாம்.

மொழியை கற்றுக்கொள்பவர்கள் புரிதல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்னும் வரிசைப் படிதான் மொழியை ஏற்கிறார்கள். மொழித்திறனில் எந்த நிலையில் உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான கேள்விகளை கேட்கலாம்?

சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவர்களின் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தையும்  வகுப்பு செயல்பாடுகளில் கலந்துக்கொள்ளவும் செய்யலாம்.

புரிதல் நிலை (Listening skill building level)


முதலில் மொழி கற்க வருபவர்களுக்கு புரிதல் திறனை கொடுக்கிறோம். புரிதல் திறன் பயிற்சி அளிக்க வார்த்தைகள், அதன் பொருள் போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறோம். நாம் சொல்லிக்கொடுத்ததை சரியாக புரிந்துக்கொண்டார்களா என்று அறிவது எப்படி?

மொழிக்கற்பவர்களுக்கு ஆரம்பத்தில், அதாவது அவர்கள் மூளையில் தேவையான வார்த்தை வளமும் வாக்கிய அமைப்புகளும் உண்டாகும் வரை, அவர்களுக்கு பேச தயக்கம் இருக்கும். எனவே அவர்களாக முன் வந்து பேச வரும்வரை அவர்களுக்கு நேரம் தர வேண்டும். அதற்கு முன் அவர்களை பேச கட்டாயப்படுத்துவது எதிர்மறையான விளைவை உண்டாக்கும் என்கிறார் மொழியிலாளர் முனைவர் க்ரேஷன் அவர்கள்.

அப்படி இருக்க நாம் சொல்லிக்கொடுத்ததை அவர்கள் புரிந்துக்கொண்டார்களா என்று அறிய அவர்கள் ஆம்/இல்லை என்னும் பதில் தரும் கேள்விகளைக் கேட்கலாம். இதற்கு Choice question என்று பெயர். இதற்கு மாணவர்களின் பதில் ஆம்/இல்லை என்று ஒற்றை வார்த்தையிலோ அல்லது அதற்கேற்ப தலையசைத்து பதில் சொன்னாலோ போதும். அதற்கு தகுந்தாற்போல் நாம் கேள்விகள் கேட்கலாம்.

உ-ம்: இன்றைய பாடம் விளையாட்டு என்று வைத்துக்கொள்வோம். விளையாட்டுப் பொருள்களை மாணவர்கள் கையில் கொடுத்து அதன் பெயர்களை பயன்படுத்தி ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

அப்போது ஒரு பந்தைக் காட்டி, "இது பந்தா?" என்று கேட்கலாம்.

இப்படி கேள்விகள் கேட்பது பந்து என்ற வார்த்தை அவர்களுக்கு புரிந்ததா என்று அறியவே. மேலும் பந்து என்ற வார்த்தையின் பயன்பாடும் அதிகப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது.

பேசும் நிலை (Speaking skill level)


புரிதல் நிலை தாண்டி, மாணவர்கள் சில வார்த்தைகள் / வாக்கியங்கள் பேச ஆரம்பித்தபின், அவர்களிடம் கற்றுக்கொடுத்த விஷயங்களிலிருந்து ஒரு சில வார்த்தை/சிறு வாக்கியம் பதில் வரும் கேள்விகள் கேட்கலாம்.

உ.ம்: அதே பந்தைக் காட்டி, "இது என்ன?" என்று கேட்கலாம்.
மாணவர்கள் "பந்து" என்றோ "இது பந்து" என்றோ பதில் சொல்வார்கள்.

இதற்கு Product question என்று சொல்வர்கள். இது போன்ற கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்கள் பார்த்த பொருளின் பெயரை அவர்களது மொழிப்பெட்டகத்திலிருந்து வெளிக் கொணர்ந்து சரியாக பயன்படுத்த முயற்சியும் பயிற்சியும் செய்வார்கள்.

இடைநிலை மொழித்திறன்



பின்பு அவர்களுக்கு மொழித்திறன் (புரிதல், பேசுதல்) நன்றாக வளர்ந்த பின், படிக்கும்/கேள்விப்படும் விஷயங்களில் உள்ள விவரத்தைக் கொண்டு பதில் சொல்லும்படி கேள்விகள் கேட்கலாம். அவர்கள் புரிந்துக்கொண்டது, அவர்கள் கருத்துக்கள் போன்ற விவரங்களை சொல்லும் கேள்விகளைக் கேட்கலாம். இதற்கு process question என்று பெயர் சொல்வார்கள்.

உ.ம்: சிங்கமும் முயலும் கதை சொன்ன பிறகு...

  1. அந்த காட்டின் ராஜா சிங்கம். சரியா தவறா? Choice question.
  2. அந்த காட்டின் ராஜா யார்? Product question
  3. அந்த சிங்கத்தை கொன்றது யார்? Product question
  4. அந்த காட்டில் எத்தனை மிருகங்கள் வாழ்ந்தன? Process question. இந்த கேள்விக்கான பதில் இந்த கதையில் நேரடியாக இல்லையென்றாலும், மாணவர்கள் கதையில் படித்ததை வைத்து ஒரு புரிதலுக்கு வந்திருப்பார்கள். அதற்கேற்றவாறு பதில் சொல்வார்கள். பதில் ஓரளவு தோராயமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அந்த காட்டில் மிருகங்களே இல்லை என்று சொன்னால் மாணவர்களுக்கு அந்த கதை புரியவில்லை என்று பொருள்.

உயர்நிலை மொழித்திறன்


முயல் சிங்கத்தை கொன்றது சரியா? ஏன்? Metaprocess question. மாணவர்கள் அவர்களது சொந்த கருத்தை சொல்வார்கள். இதில் சரியான பதிலோ தவறான பதிலோ கிடையாது. அவர்களது கருத்துக்களை சொல்கிறார்கள். இந்த வகைக் கேள்விகளை metaprocess கேள்விகள் என்பார்கள்; மாணவர்கள் அவர்கள் கருத்தை அவர்களது காரணத்தோடு சொல்வது. இது போன்ற கேள்விகள் இடைநிலை மற்றும் உயர்நிலை மாணவர்களைக் கேட்கலாம்.

மேலும்...


மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்வி வகைகளுள் Choice question and product questions போன்றவை display questions என்றும், Process and Metaprocess போன்றவை Referential questions வகைகள் என்றும் கூறுகிறார் Dr. குமாரவடிவேலு. Display questions வகைகள் ஆசிரியருக்கு ஏற்கெனவே தெரிந்த பதில்களுக்குண்டான கேள்விகள். நேரடியாக இல்லாமல், புதிய கோணத்திலும், புதிய விவரங்களைக் கொண்டும் சொல்லப்படும் பதில்களுக்கான கேள்விகள் Referential questions வகைப்படும்.

Source: Beyond Methods book by Dr. Kumaravadivelu.

முடிவு


மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை  5W1H வகைக்குள் பொருத்த முடியுமா? முடியும். ஆனால் இந்த வகைக் கேள்விகள் எந்த மாதிரியான கேள்விகளை எந்த மாதிரியான மாணவர்களுக்குக் கேட்கலாம் என்கிற வழிமுறையைக் கொடுக்கிறது. 5W1H கேள்வி முறை passive learning முறையாகும். இங்கு கொடுத்துள்ள முறையில் Active learning--க்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

உங்கள் மாணவர்களது மொழித்திறனுக்கேற்ப, உங்கள் கல்வி நோக்கத்துகேற்ப சரியான கேள்விகளைக் கேட்டு வகுப்பை விறுவிறுப்பாகவும் ஆர்வத்துடனும் கொண்டு செல்லலாம் என்று நம்புகிறேன்.

நன்றி
லோகு

No comments:

Post a Comment