Wednesday, January 20, 2016

மொழிக்கல்வி பற்றி சில கேள்விகள்

நமது மொழியை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு மொழிக்கல்வி பற்றி தேவையான அளவு தெரிந்திருப்பது மிகுந்த பயனுள்ளதாக அமையும். மொழிக்கல்வி பற்றி என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளவே இந்தக் கட்டுரை முயற்சி. இங்கு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். கேள்வியில் ஆரம்பித்து அந்த கேள்விக்கான விடையை நாம் அறிய அடுத்த அடி வைக்கும் போது இது பற்றி மேலும் நிறைய தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் என்று நம்புகிறேன்.

மொழி

  1. இந்த பூமியில் உள்ள மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத, மனித இனத்துக்கு மட்டும் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து மொழியாகும். இது மனிதர்களுக்கு மட்டும் எப்படி வந்தது?
  2. நம் மனதில் தோன்றிய எண்ணத்தை அடுத்தவர்கள் மனதுக்கு எந்த கருவியின் உதவியும் இல்லாமல் எப்படி நம்மால் கொண்டு செல்ல முடிகிறது?
  3. நம்மால் எப்படி மொழியை பயன்படுத்த முடிகிறது?

மொழிக்கற்றல்

  1. மொழியை நாம் எப்படி பெறுகிறோம்?
  2. நம் மூளை எப்படி மொழியை உள்வாங்குகிறது?
  3. மொழித்திறன்கள் என்னென்ன? அவற்றை நாம் எந்த வரிசையில் இயற்கையாக கற்கிறோம்?
  4. அடுத்தவர்கள் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ள சிறு குழந்தைகள் எப்படி ஒரு மொழியை எந்த ஒரு கடினமும் இல்லாமல் இவ்வளவு எளிதில் பெற முடிகிறது?
  5. "மொழிக்கற்கும் இயந்திரம்" என்றழைக்கப்படும் சிறுப் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிகளில் இரண்டாவது மொழியைக் கற்கும்போது தடுமாறுவது ஏன்? அந்த இரண்டாவது மொழியை சரியாக கற்க முடியாதது ஏன்? என்ன காரணம்?
  6. A kid born in a poor linguistic environment can and does acquire even a hard to learn language. But, why does a kid born in highly rich linguistic environment struggles to learn even a language like Spanish which is similar to English, a language they know already?
  7. If so, is it reasonable to expect that the kids learning Tamil once a week can master the language that easily and quickly? What do we have to do then?

நமது நோக்கம்

  1. நம் பிள்ளைகள் நீண்ட காலத்துக்கு நம் மொழியை பயன்படுத்தவும் அவர்களது அடுத்த தலைமுறைக்கு எடுத்துசெல்லவும் நாம் என்ன செய்ய வேண்டும்?
  2. நமது நோக்கம் என்ன? அதை எளிதில் அடைவது எப்படி?
  3. நம் இலக்கை நோக்கி சரியாக போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது? தேர்வுகள் போதுமா?
  4. What do we want our students to be able to do?
  5. Do we want them to acquire knowledge or skill?
  6. What is important for long term retention?
  7. The language has to stay with them for long time. Reading, Writing, Listening and Speaking. Split into two. Which one gets high score? Listening and speaking.
  8. What is the goal of regular school. Get high score and get into good college. Or become fluent speaker of Spanish?

மொழிக்கல்வி பற்றி ஆய்வின் கருத்துகள்

  1. மொழித்திறன்கள் என்ன? இவற்றில் முக்கியமானது எது?
  2. ஒரு மொழியைக் கற்க வயது ஒரு தடையா?
  3. வயது ஆக ஆக மொழிக்கற்கும் திறன் நமக்கு குறைந்துவிடுகிறதா?
  4. Is it true that the kids can learn faster than the adult? What makes it appear so? Are we comparing apples to apples?
  5. Is there a difference in gender in learning a language?
  6. When we acquired our first language, did we "learn and use" or "use and learn"?

மொழிக்கல்வி அணுகுமுறைகள்

  1. எப்படி நம் மொழியை எளிதாக அவர்களுக்கு எடுத்துச் செல்வது?
  2. ஒவ்வொரு பிரச்சினைக்கும் பல தீர்வுகள் உள்ளன. அதுபோல் மொழியை கொண்டு செல்லவும் பல வழிகள் உள்ளன. அதில் சிறந்தது எது?
  3. பேச்சுத்தமிழா எழுத்துத்தமிழா? இதில் எதை முதலில் கொடுக்கவேண்டும்?
  4. What are the ways we can take the language. Is it based on scientific study or just a belief?
  5. Is it better to do what we did successfully already of try something different? Can we afford it?
  6. What will happen if a we put a student with a group of Tamil only speaking kids and ask him to play with them?

உத்திகள்

  1. என்ன செய்தால் நம் மொழியை எளிதாக நம் பிள்ளைகளுக்கு கொண்டு செல்லலாம்?
  2. நீண்ட கால நோக்கில் அவர்களுக்கு மொழியை கொண்டுசெல்ல நாம் வகுப்பிலும் வகுப்புக்கு வெளியிலும் என்ன செய்யவேண்டும்?
  3. என்ன மாதிரியான பாடத்திட்டங்கள், என்ன மாதிரியான வகுப்பு செயல்கள் நம் பிள்ளைகள் தமிழை எளிதிலும் ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ள வழிவகுக்கும்?

இலக்கணம்

  1. நாம் முதல் மொழி கற்கும் போது நமக்கு யாரும் இலக்கணம் சொல்லிக் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, 3 அல்லது 4 வயதில் நம்மால் எப்படி இலக்கணப் பிழையின்றி பேச முடிகிறது?
  2. பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களுக்கு இலக்கண விதிகள் தெரியாது. அப்படி இருக்க எப்படி அவர்கள் இலக்கணப் பிழையின்றி மொழியை பயன்படுத்துகிறார்கள்?
  3. நாம் மொழியை பயன்படுத்தும்போது ஒவ்வொரு இலக்கண விதியையும் சரியாக யோசித்துத்தான் பயன்படுத்துகிறோமா? அது ஆகக்கூடிய காரியமா?
  4. அப்படி இருக்க ஒரு மொழியை பேச இலக்கண விதிகள் தெரிந்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம்?
  5. How important is it to know the grammar rules? Do we have to really know how a watch works to know the time?

முடிவு


இந்த கேள்விகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விகளுக்கு பதிலைக் கண்டறிந்து அதை பயன்படுத்தி சிறப்பாக நம் தமிழ் மொழியை நம் பிள்ளைகளுக்கு கொண்டு செல்லலாமே!

நன்றி
லோகு

No comments:

Post a Comment